×

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்: குடிநீர் ஏரிகளில் 87.49% நீர் இருப்பு

சென்னை: புழல் ஏரிக்கு வினாடிக்கு 26 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,821 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 87.49 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் 10.286 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம்-85.1%; புழல்-85.48%; பூண்டி-95.23%; சோழவரம் -73.08%; கண்ணன்கோட்டை ஏரி-99.2% நீர் இருப்பு உள்ளது.

The post சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்: குடிநீர் ஏரிகளில் 87.49% நீர் இருப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Drinking Lakes ,Chennai ,Lake Bugal ,Worm Lake ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...